Thursday, 3 October 2013

                    1.வாழ்வு
ஒரு   சிற்பிக்கும்
ஓவியனுக்கும்
நடுவே
அமைவதன்
நோக்கமே
வாழ்வின்
தத்ததுவம்
               


 2. தமிழ் ( தாய் )
காலங்கள்   கடந்தாலும்
கூற்றுவன்
தம்   பணியை
செய்ய
மறப்பதில்லை
இப்பிரபஞ்சத்தில்
பிறந்தாரை
விடுவதில்லை
விடுதலை ( மரணம் )
சந்திர, சூரியனும்
ஒருநாளேனும்
மாறி வருவதில்லை
கடனாளிகள் (ளை)
விடுவதில்லை
அசல் ,வட்டி வாங்குவதை......
வெற்றி  பெற வேண்டும்
என்பவரை
தோல்வி........

என்றாலும் 
நான்
விடுவதில்லை
என்
உயரிருக்கும்
வரை ...........
               


                    3. மறதி
ஒவ்வொரு
தருணத்திலும்
உன்னை  ( மறதி)
மறக்க
நினைக்கிறேன்
ஆனாலும்
மறந்துவிடுகிறேன்
மறதியால்
               


 4.கண்ணீர்  பூக்கள்
என்ன  பந்தம்
    உ (எ)னக்கும்
என்மனம்
தளர்ந்து  போகையில்
அறிவியாய்
நீ .......
            (என்ன)
களிப்பால்  களிநடனம்
புரிகையிலே
காவியமாய்
நீ
என்
விழியோரத்தில்
            (என்ன)
அறியா
வயதினிலே
அடைய  வேண்டுமே
என்னும்
போதெல்லாம்
உன்னை
நாடினேன்
                (என்ன)
சில  பொழுதுகள்  மௌனமாய்
நிற்கையிலே  மெல்ல
மன வலியினை  அகத்தின்கண்
கொண்டு  தீர்த்தாயே
                (என்ன)
போலியாய்  சில  நாட்பினங்களால்
பொதிந்த  போன
என்
நட்பின்   பொய்கையில்
வாடியபோது
ஆறுதல்  அளித்தாயே
எமக்கு
                (என்ன)
உணர்வுகளின்
ஊற்றாய்
நீ
அவ்வப்போது
என்
விழியோரத்தில்.....
என்
வலிகளின்
வலிமைகள்
நீயென
புரிந்து      கொண்டேன்
                    (என்ன)
                

                                             
                                    
                                     5.பயணம்
ஓர்
 வழிப்பயணம்
உ (இ)ழைக்க
    வாழ்வு.....
                                    



                        6.நாணம்
சாலையோரத்தில்
வாழைமரம்
நாணத்தில்
அரசியல்வாதி
    வருகை


                 அவசர அவசரமாய்
ஓ..............
அவசரமே
ஏன்
இந்த
நிதானங்களின்
கொலவெறி உமக்கு ?

உன்
அவசரத்தாலோ
என்னவோ
நித்தம் நித்தம்
ஒத்திகை
பார்க்கிறேன்
சாமிகிட்ட போக
                                ( ஓ........ அவசரமே )
நல்லது
கெட்டது
இரண்டுக்கும்
உன் அகராதியில்
ஒரே பொருள் தானோ?
சில
தருணங்களில்
உன் முடிவும்
சுகமானது தான்
அவரவர் பார்வையில்
                                ( ஓ........ அவசரமே )
காலத்தை
வென்ற
கூற்றுவனா     நீ ?
ஆமாம் ! அமாம் !
உண்மையில்
கூற்றுவன் தான்
நீ
நிதானங்களுக்கு!!

நியும்
நிதானமும்
ஓர்
வயிற்றில்
பிறந்தவர்கள் தானே ?
அப்ரோம்
ஏன்
நீ
மட்டும்
அவசர அவசரமாய் ???                                                                                                                     
                                ( ஓ........ அவசரமே )
ஓ........
கடமையை செய்
என்பது  தான்
உன்
குறிக்கோளா ?
இருக்குமோ ???

பாவம்
நீயென்ன
செய்வாய் ?
ம(மா)க்களின்
பேராசைக்கு.......

அவரவர்
தேவைக்கு
உன்
தேவை
என்று
கருதுகிறார்கள்
அப்ரோம்
ஏன்
உன்மேல்
பழி
சுமத்துகிறார்கள்...?

உனக்கு
கோபமே....
வராதா....?
        (போட முட்டாள் )
யார்
சொன்னது
எனக்கு
கோபம்
வராதுன்னு....?

என்
கோபம் தானே
இப்பிரபஞ்சம்
அது
தெரியாத.....?
உமக்கு
                                 ( ஓ........ அவசரமே )
               
                   
                    2.மனிதன்
கெஞ்சுனா
மிஞ்சுவதும்
மிஞ்சுனா
கெஞ்சுவதும்
மனிதன்......?



                                                               
                    அன்னைக்கு

அகிலம்    போற்றும்
அன்னையாய்    நீ
இப்பிரபஞ்சத்தில் அறிமுகம்
செய்தாயே
உன் குறிதியால்
எம்மை .....

எத்தனை  எத்தனை
எதிர்  பார்ப்புகள்
என்மேல்
உமக்கு......

ஊற்றாய்  பொங்கும்
உன்
அன்பிற்கு
நிகரானவை
எவை
இப்பிறபஞ்சத்தில்
நன்மை  தீமையென
கற்றுக் கொடுத்ததே
உம்  சொல் வளம்
எனக்கு........

மழலைப்  பருவத்தில்
நிலாவினைக்காட்டி
நித்தம்  நித்தம்
நிலாச்  சோறு
எனக்கு......
நீவீர்  உண்டிரோ ?

ஆலமரவிழுது  போல்
உம்னில்
தோற்றுவிக்கப்பட்டவன்
நான்
நாளும்  ஊட்டி
வளர்த்தாயே
தமிழ் பண்பாட்டினை
எமக்கு....
ஞாலம்
போற்றிடுமே   வியந்து
அது    கண்டு
உம்மை ......

ஈன்றெடுத்தாயே
உம்  மரணத்தையும்
எதிர்  பார்த்து
எம்மை ....
உன்மையில்
நீவீர்   மனிதகுலம்    தானோ ?
உம்மையே
அர்பணித்தாயே
எம்
மழலை  பருவத்திற்கு ......

ஐயங்களை
கதையாய்
வார்தெடுப்பாயே  எமக்கு
ஆறாம் அறிவினை
பகுத்தாயே
பன்முகமாய்
எமக்கு .......

'' அம்மா '' என்ற  கவிதைக்கு
அகராதியை
புரட்டினேன்
நான்
அகிலமே அம்மா !
என்றது   அகாரதி !
இல்லை
உமக்கு
நிகரில்லை
இவ்வுலகம்
என்றேன்
நான் ......

ஓயாமல்  ஓடுகின்ற
நதியினை  உற்றுநோக்கு
வாழ்வாதார  நிலையை
கற்றுக்கொள்வாய்

என்றாயே ..........
ஒற்றைக்கொடியில்
உயிர்  கொடுத்தாயே
எமக்கு.......

ஏற்றத்தாழ்வுகளை
கொள்ளாதே   உம்மில்
என்றாயே .....
எல்லாம்
நம்   இனம்
என்ற
பொருட்டாய்

தோல்வியே
உம்  வெற்றி
என்றாயே
வலியில்   வலிமை
பெறத்தானா ....?
வாழ்வின்
இலக்கணங்களை
அன்பால்  பொழிந்தாயே
ஆறாம் அறிவின்
இலக்கணத்தை  தெளிவுறக்
கற்றேன்
உம்மிடம்    நான்  ......

எண்ணங்கள்
யாவும்    நீ
கொள்ளும்  வடிவம்
என்றாயே ...
இவ்வுலகம்
நிலையானதல்ல
என்பதற்காகவா... ?

ஒருவகையில்
உலகிலுள்ள
எல்லா  ம ( மா ) க்களும்
கடனாளிகளே !!!
ஆம்
உம்மிடம்
பெற்ற  உயர்ந்த
அன்பைத்தான் ......
வட்டியை  மட்டும்
செலுத்தி  வருகிறேன்
நான்
பெரும்  கடனில்
மூழ்கவிட்டிரே
எம்மை ......
அசல்
முழுவதும்  செலுத்த
ஓரு ஜென்மம்
போதாதம்மா
எமக்கு ......

தொப்புல்  கொடியால்
தோற்றுவித்து
தொல்லைகள்  தொலைந்தன
என
இல்லாமல்
தொலைதூர  வாழ்விற்கு .....
தோனியாய்  நின்றாயே
உயிர்
கொடுத்த   உமக்கு
இக்கடனாளி
என்னால்
கொடுப்பது
வெறும்
மயிர்    தானே !!!!!












கவிதை

மௌனம்

புயலுக்கு
பின்
அமைதி
                 - மௌனம்

நூலகம்

இவ்வுலகம்
ஒரு
நூலகம்
இங்கு
வாழும்
ஒவ்வொரு
மனிதனும்
ஒவ்வொரு
புத்தகமாவான்
இவர்களை
பயில்வாயானால்
இவ்வுலகம்
நிச்சயம்
உன்னை
பயிலும்......